PDF/EPUB multi channel.co ô கடாரம் [Kadaaram] Epub Ú

பதினோறாம் நூற்றாண்டுமேற்கே ரோமானியர்களின் வீழ்ச்சி துவங்கிய காலம்இஸ்லாமிய சன்மார்க்கம் எழுச்சி கண்ட காலம்கீழைத்தேசங்களில் வணிகம் செழிப்புற்றிருந்த காலம்சீனத்தில் சொங் சாம்ராஜ்யம் எழுச்சியுற்றிருந்த காலம்பரதகண்டத்தில் உத்தரபதத்திலே கஜினி கால் வைத்த காலம்தக்கணத்துச் சோழசாம்ராஜ்யம் வடக்கே கங்கை வரையும் மேற்கே சேர பாண்டிய தேசங்களும் தெற்கே ஈழமும் பண்ணாயிரந்தீவு சாந்திமத்தீவும் இன்னும் பலவும் கொண்டு பரதவர்ஷத்தில் குறிப்பிடத்தக்க நிலப்பகுதியை தன் ஆதிக்கத்தில் சேர்க்கத் துணிந்த காலம் சோழர்களின் பொற்காலம்இத்தகைய காலகட்டத்தில் இந்தப்பூவுலகின் அத்தனைத் தேசங்களும் வணிகத்தொடர்பில் பலமான இணைப்பில் இருந்தனசொங் மன்னன் பட்டுப்பாதையை நிலவழியிலிருந்து நீர்வழிச்சாலைக்கு மாற்றியிருந்தான் இதனால் வணிகத்தில் மேற் திக்குத் தேசங்களை விட கடலடுத்த கீழ்த்திக்குத் தேசங்களின் மேலாண்மை அதிகமாய் இருந்த காலம் மேலும் சொங் மன்னன் தன் வணிகக் கொள்கைகளிலும் அயல்தேசத்து வணிகர்கள் விரும்பத்தக்க பல மாற்றங்களைக் கொண்டு வந்திருந்தான் அவை காரணமாய் தேசங்கள் அத்தனையும் சீனத்தை நோக்கி போட்டி போட்டுக்கொண்டு கடலைக் கடைந்தனஎக்காலத்திலும் நாடுகளுக்கிடையே போட்டியும் பொறாமையும் எழும்புவதற்கு ஆயிரம் காரணம் கூறப்பட்டாலும் ஆழமாக நோக்கின் பெரும்பாலும் அவை வணிகரீதியான காரணங்களையே மையமாகக் கொள்கின்றன அதிலும் வாணிபத்தின் உண்மை வலுவை முழுவதுமாய் உணர்ந்திருந்த இந்த காலகட்டத்தில் தேசங்களின் அரசியலில் வணிகம் ஸ்திரமான இடத்தைக் கொண்டிருந்தது என்பதை நாம் சரித்திர நிகழ்வுகளின் வழியே காண முடிகிறது அத்தகைய போட்டிகள் நிறைந்த காலகட்டத்தில் தான் நம் கதையும் அமைந்திருக்கிறதுபதினோறாம் நூற்றாண்டில் இந்தக் கதைக்காக நாம் செல்வது முதலாம் இராஜேந்திரச்சோழன் அரசாண்ட காலத்துக்குTo buy Onlineயார் அந்த இராஜேந்திரச்சோழன்?தஞ்சையிலே இராஜராஜேஸ்வரமென்ற பெரியகோயிலைக்கட்டியெழுப்பி உலக வரைபடத்தில் தமிழனுக்கொரு தனிக் கொடியை நாட்டிய பெருவேந்தனான இராஜகேசரி ஸ்ரீ ராஜராஜ சோழனின் புதல்வன் தான் இந்த இராஜேந்திரச்சோழன் இவனது காலம் தமிழகத்தின் பொற்காலம் இவன் காலத்திய இந்திய மன்னர்கள் ஆண்ட நாடுகளிலேயே தலைசிறந்த நாடாகத் தன் சோழநாட்டை முன்னிருத்தித் தமிழனின் தலை நிமிர்த்தியும் தாகம் தீராமல் தமிழகத்தின் எல்லையை நீட்டித்து விரிவு படுத்திக் கொண்டேயிருந்தான்இந்த இராஜேந்திரச் சோழன் பொஉ1025 ல் கடாரம் நோக்கிப் படையெடுத்ததாக அவனது விரிவான மெய்கீர்த்தியும் திருவாலங்காட்டுப் பட்டயமும் கூறுகின்றன ஆனால் படையெடுப்புக்கான காரணத்தை அவை கூறவில்லைஇக்காலகட்டத்தில் அவன் படையெடுத்துக் கைக்கொண்ட கடாரம் எப்படி இருந்தது? அதை ஆண்ட அரசமரபினர் யாவர்?இராஜராஜசோழன் காலத்தில் கடாரத்து மன்னரின் விருப்பப்படி நாகையில் ஒரு விகாரை எடுக்கப்பட்டு அதற்காக ஆனைமங்கலமெனும் ஊரை மானியமாக்கியது கல்வெட்டுகளால் புலப்படுகிற உண்மை எனில் படையெடுப்புக்குச் சில யாண்டுகள் முன்பு வரை நட்பில் இருந்த இரு தேசங்கள் திடீரென்று வைரிகளானது எங்கணம்?கீழ்த்திக்குத் தேசங்களிலேப் பெரும்சக்தி படைத்த நிலப்படையும் நீர்ப்படையும் கொண்டதென பெயர்பெற்ற ஏழாம் நூற்றாண்டில் துவங்கி படிப்படியாய் உறுதிபெற்று மேற்கே அக்ஷய முனையிலிருந்து வரைபடம் பக்7 வடக்கே மாபப்பாளம் வரை நீண்டு கிழக்கே மாயிருடிங்கம் இலங்காசோகம் மேவிளிம்பங்கம் மாடமாலிங்கம் என்று கடாரமும் அதனைச் சூழ்ந்த நாடுகளும் தெற்கே சமுத்ரதீபம் முழுமையும் சாவகம்ஜாவா என்ற யவத்வீபத்தின் விளிம்புகள் வரையிலும் முழுமையாய் ஒரு குடையின் கீழ் ஆட்சியில் வைக்கத்துணிந்த ஸ்ரீவிஜய சாம்ராஜ்யமே கடல்கடந்து வந்த சோழப்படைக்கு அடிபணிந்தது சாத்தியம் தானா? எனில் அது எப்படி? இந்தப் படையெடுப்பினால் ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தைச் சுற்றியும் அதைச் சார்ந்துமுள்ள தேசங்களின் நிலை என்ன?இவையெல்லாம் சரித்திரம் பதில் சொல்லாமல் விட்டுச்சென்ற சில புதிர்கள்இரண்டாம் நூற்றாண்டுக்கும் முன்பிருந்தே சுவர்ணதீபத்தைச் சுற்றி வந்த தமிழ் தொட்ட மலாய்க்காற்று எதிர்த்து வந்த சோழனுக்கு என்ன பதில் சொல்லியிருக்கக்கூடும்? கடாரத்தரையனோடு நட்பிலிருந்த சோழன் திடீரென்று படை நடத்திய காரணம் யாதாயிருக்கக் கூடும்? அந்த புதிருக்கான விடையைக் கற்பனை கலந்து தேட முயல்வதே இக்கதைஇது இப்படித்தான் நடந்தது என்ற தெரிவும் இல்லை இப்படி நடந்திருக்கலாம் என்ற யூகமும் இல்லை இப்படி நடந்திருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையேTo buy Online Page


10 thoughts on “கடாரம் [Kadaaram]

 1. says:

  இப்படியும் ஒரு சதி நடந்திருக்குமோ என்று நம்மை நினைக்க வைக்கிறது ராஜேந்திர சோழர் கிழக்காசிய நாடுகளை வென்றார் என்று படித்து புளங்காகிதம் அடைவதோடு நின்று விடாமல் ஒரு புதினத்தை புதிய கோணத்தில் படைத்த மாயாவுக்கு நன்றி சீனம் அராபியர்கள் இடையே உள்ள பட்டு வழி பாதை நடுவே இரு சாம்ராஜ்யங்கள் இரு தரப்பினரும் தங்களது மேலாண்மையை நிலைநிறுத்த முயற்சி செய்கிறார்கள் இடையில் ஒரு சதி போர் வழக்கமாக வரலாற்று கதைகளில் போர் பகுதி தான் விறுவிறுப்பாக இருக்கும் ஆனால் இப்புதினத்தில் போர் முடிந்த பிறகு தான் விறுவிறுப்பாக இருக்கிறது ஆங்காங்கே சிற்சில தொய்வுகள் இருப்பினும் அதையெல்லாம் உதாசீனப்படுத்த வைக்கிறது கதைக்களம்


 2. says:

  ஒரு நாட்டின் வளர்ச்சியும் சுபிக்ஷமும் வணிக வளர்ச்சியைக் கொண்டே அமைகிறது அதனாலேயே நாட்டின் அரசியலிலும் வணிகர்கள் பெரும் பங்காற்றுகிறார்கள் செல்வத்திலும் அதிகாரத்திலும் மன்னர்களுக்கு இணையாகவும் ஏன்? சில சமயம் வணிக வெற்றிக்காக அம்மன்னர்களையே மாற்றி அமைக்கும் வல்லவர்களாகவும் விளங்குகிறார்கள்முதலாம் இராஜேந்திரசோழனின் காலம்சோழர்களின் பொற்காலம் கடலுக்கடுத்து இருந்த கீழ்த்திக்கு தேசங்கள் கடல் வணிகத்தில் சிறந்து விளங்கியதுநீர்வழியில் அரபு தேசங்களுக்கும் சீனத்துக்கும் இடையே இருந்த இரண்டு பெரும் பேரரசுகள் சோழநாடும் ஸ்ரீ விஜயமும் நட்பு நாடாக இருந்தாலும் கடல் வணிகத்தில் முதன்மை பெறும் போட்டியோடிருந்தனஇராஜேந்திர சோழன் கடல் கடந்து கடாரம் கைக்கொண்டதை சொல்லும் கல்வெட்டுகளின் படி இத்தனை நாள் நட்புறவோடு இருந்து வந்த சோழமும் கடாரமும் எங்கனம் பகையானது என்ற கேள்விக்கு வணிக அரசியல் என்கிற யூகத்தின் அடிப்படையில் விரிகிறது கதைஸ்ரீ விஜயத்தில் சோழ வணிகர்களுக்குக் கட்டுப்பாடுகள் அதிகரிக்கிறது அவர்களின் ஆபத்துதவி படைகள் எல்லாம் சோழ நாட்டுக்கே திருப்பி அனுப்பப் படுகின்றன இதனால் குழப்பத்தில் இருக்கிறார் சோழ மன்னர் அதற்குத் தகுந்தார் போல் மன்னரின் நெருங்கிய நண்பரான நாகப்பட்டினம் சூளாமணிப்பன்ம விகாரையின் தலைமை துறவி கொல்லப்படுகிறார் சோழ நாட்டுக்கு எதிராக ஸ்ரீ விஜயம் சதி செய்கிறது என்று அவர் கையால் எழுதப்பட்ட ஓலை இளையதுறவி மூலம் மன்னருக்குக் கிடைக்கின்றதுஇது சோழ நாட்டுக்கு எதிரான சூழ்ச்சியாகக் கருதி இளைய சக்ரவர்த்தி இராஜாதிராஜன் தலைமையில் சோழர் படை கடாரம் நோக்கிப் படையெடுத்து வென்று முதலாம் இராஜேந்திரனின் பேரன் பராந்தகனுக்கு கடாரத்தரையனாக முடி சூட்டுகிறார்கள் போரில் தோற்ற கடாரமன்னர் பலமான உடல் காயத்தோடு தலைமறைவாகிறார்அதன்பிறகே சோழ மன்னருக்கு அது சோழ நாட்டுக்கும் ஸ்ரீ விஜயத்துக்கும் எதிரான சூழ்ச்சி என்று தெரிய வந்து மனம் வருந்தி தலைமறைவாக இருக்கும் கடாரமன்னர் சங்க்ரமரை கண்டுபிடித்து சதியை முறியடிக்க முயற்சிக்கிறார்ஸ்ரீ விஜய மன்னர் சங்க்ரமர் பற்றிய ஓலையோடு சோழநாட்டிலிருந்து ஸ்ரீ விஜயம் செல்லும் சோழநாட்டு தலைச்சிறந்த வணிகரின் இளைய மகன் நித்திலங்குமரனும் ஸ்ரீ விஜயத்தின் தலைச்சிறந்த வணிகரின் மகள் மித்ராவும் தான் நாயகன் நாயகி ஏற்கனவே பின்னப்பட்ட கதையில் வகுக்கப்பட்ட வழியில் ஒவ்வொரு கதாப்பாத்திரங்களையும் இணைக்கும் அத்தோடு கதையை நகர்த்தும் காரணிகள்ஒருவன் செய்த சதியால் இவ்வளவு பெரிய போர்கள் சாத்தியமா? இவ்வளவு உயிர் இழப்புகள் சரியா? இத்தனை கீர்த்தி படைத்த மன்னர்கள் இதை ஆராய்ந்து பார்த்திருக்க மாட்டார்களா? போன்ற கேள்விக்குக் கதையிலேயே பதிலும் கூறியிருக்கிறார்கள்என்ன தான் தகவல் பரிமாற்ற குறைபாடாக இருந்தாலும் மன்னர்களின் மனதில் என்றும் இருக்கும் நாடு பிடிக்கும் ஆசையும் அதிகாரமும் கூடக் காரணம் ஆனால் தன் வீரத்தாலும் செல்வத்தாலும் திறமையாலும் அதிகாரத்தாலும் நாட்டைத்தான் பிடிக்க முடியும் நாட்டில் உள்ள மக்களின் மனதை பிடிக்க முடியுமா? அதுவும் அந்நிய தேசத்தில்ஆனாலும் சங்க்ரமர் மகளைஸ்ரீ புத்ரி பராந்தகருக்கு மணமுடித்து கடார அரசியாக்கி கடார மக்களின் மனதை மாற்றலாம் என்கிற இளைய சக்கரவர்த்தி இராஜாதிராஜனின் முயற்சிகள் ஸ்ரீ புத்ரி மாதரத்து மன்னன் எர்லங்கரை காதலிப்பதால் தோல்வியில் முடிகிறதுஇதனால் சங்க்ரமரை கண்டுப்பிடித்து நாட்டை அவரிடமே ஒப்படைக்கிறார்கள் ஆனால் சங்க்ரமர் துறவறம் செல்ல முடிவெடுத்ததால் கடற் கொள்ளையனால் வளர்க்கப்பட்ட கடற் கொள்ளையன் ஏகவீரன் தான் இறந்துவிட்டதாக நினைத்த தன் மகன் என்பதை கண்டுணர்ந்து அவனை மன்னராக முடி சூட்டுகிறார்இத்தனை சதிக்கும் காரணமாய் இருந்தவனையும் சிறையிலடைக்கிறார்கள்150 பக்கத்துக்கு மேல் தான் கதை சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது அதுவரை கதாபாத்திரங்களின் வர்ணனைகள் தன்மைகள் என்று மெதுவாக நகர்கிறதுத்ரில்லர் சஸ்பென்ஸ் கதை நிறைய படித்தவர்களுக்கு சதிக்கு காரணமான அந்தத் தலைவன் யாரென்று அந்தக் கதாபாத்திரத்தின் நேரடி அறிமுகத்திலேயே தெரிந்துவிடும் ஆனால் ஏன் என்ற கேள்விக்குக் கடைசியில் தான் விடைகதையில் இயற்கை வர்ணனைகள் வரலாற்று உண்மைகள் அந்தந்த இடத்தின் புவியியல் அமைப்பு என்று தேவையான இடத்தில் ஆங்காங்கே தூவி சென்றிருக்கிறார் ஆசிரியர்


 3. says:

  incredibly slow


 4. says:

  Pakka EntertainerWe might have read about Raja raja Chozhanthrough Kalkis' wordsTo read about his son Rajendra Chozhan and the business of their times that too overseaswe should read Maya's KadaramShe depicted the 11th century in front of our eyes thro her remarkable wordsI loved the second half very muchThe fictional characters NithilanMithra carries the story so beautifullyThe story takes a jet speed once they get introduced with each otherOverall a complete historical fictional novelIt has all the attributes of this genreCongratz to Maya


 5. says:

  I need to study this novel


 6. says:

  yes i am rajendra cholar's big fan thiru balakumaran's gangai konda cholan is the best historical novel rajendra cholar was a big king of indian history